சவேந்திர சில்வா இராணுவத் தலைமைத் தளபதியாக நியமனம் சிறிலங்காவில் மனிதம் மரணித்துவிட்டது

121

இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா இராணுவத் தலைமைத் தளபதியாக நியமனம் சிறிலங்காவில் மனிதம் மரணித்துவிட்டது என்பதை உறுதி செய்கிறது என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது.

இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இனப்படுகொலையாளி சவேந்திரா சில்வா நியமிக்கபட்டமைக்கு சர்வதேசமே கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள் நிலையில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையும் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்பதோடு இந்த நியமனத்தை முன்னிட்டு ஆச்சரியப்படவில்லை, ஏனெனில் சிங்கள இனவாத அரசின் படுமோசமான தமிழர்களுக்கு எதிரான இப்படியான நகர்வுகள் சிறிலங்காவில் நடைபெறுவது இது ஒன்றும் முதல்தடைவ அல்ல.

இலங்கையின் வடக்கு கிழக்கினை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர் களின் தாய்மார்களும் உறவினர்களும் மைத்திரிபால சிறிசேனாவின் இக்கொடுரச் செயலுக்கு தமது கடும் எதிர்ப்பினையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். இறுதி யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சரணடையும் போது சவேந்திர சில்வா தலைமை தாங்கிய படையணியிடமே உறவுகளை கையளித்தோம் என பல தமிழத் தாய்மார்கள் கண்ணீருடன் கூறுகின்றனர்.

 

ஐரோப்பிய ஒன்றியம், மனித உரிமை ஆணையாளர், ஐநா பொதுச்செயலாளர், மற்றும் பல சர்வதேச நாடுகள் சவேந்திர சில்வாவின் இராணுவப்பிரதானி நியமனத்தையொட்டி தமது பலத்த கண்டனத்தை சிறிலங்கா அரசிற்குத் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் 42வது அமர்வு நடைபெற உள்ள இந்த நேரத்தில் சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கையானது இலங்கைத் தீவில் மனித உரிமையும் சனனாயகமும் மருணித்துவிட்டது என்பதை தெட்டத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

 

சிறிலங்கா இராணுவத்தின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்ட சவேந்திர சில்வா கோட்டபாயவின் கட்டளைகளுக்கு இணங்க 2009ம் ஆண்டு தமிழினப் படுகொலையில் ஈடுபட்டதுடன் 146679 பேரை காணாமல் ஆக்கியும் 90000 தமிழப் பெண்களை விதவையளாக்கியும் உள்ளார். தேசியத்தலைவரின் அருமை மகன் பாலச்சந்திரனின் படுகொலையிலும் விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியாவின் படுகொலையிலும் சம்பந்தப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நூற்றாண்டில் நடைபெற்ற கொடூரமான இனப்படு கொலைகளில், 2009ல் இலங்கையில் நடந்த ஈழத்தமிழர் இனப்படு கொலை தான் மிகக் கொடூரமானதாகும்.

அமெரிக்கப் பிரசா உரிமைகொண்ட கோட்டபாய இலங்கையின் இறையாண் மையை மீறி பாதுகாப்புச்செயலாளராக நியமிக்கப்பட்ட போது சர்வதேசம் வாய்பொத்தி மௌனமாகத் தான் இருந்தது. 2009ல் தமிழின அழிப்பின் முக்கிய பங்குதாரிகளான கோட்டாபாய மற்றும் சவேந்திர சில்வா ஆகியோருக் கெதிராக இன்றுவரை எந்த நடவடிக்கைளும் எடுக்காமல் இழுத்தடிப்புச் செய்யும் சர்வதேசம் இன்று முதலைக்கண்ணீர் வடிக்கின்றது. சர்வதேசத்தின் புவியியல் பொருளாதார நலன் சார்ந்த தந்திரோபாயமாகவே இதை நாம் கணிக்கவேண்டி உள்ளது.

 

கடந்த கால ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பான் கி மூன் அமைத்த தாருஸ்மன் தலைமையிலான மூவர் கொண்ட ஆய்வுக்குழுவில் கடமை யாற்றி யவரும் சர்வதேச உண்மைமற்றும் நீதிக்கான செயற்திட்டம் என்ற அமைப்பின் நிர்வாகியுமான ஜஸ்மின் சூக்கா அம்மையாரின் கூற்றுப்படி சவேந்திர சில்வாவிற்கு எதிராக ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் நம்பகத்தன்மை வாய்ந்ததும் பாரதூரமானதுமாகும்.

சிறிலங்கா சனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் சவேந்திர சில்வா விற்குக் கொடுக்கப்பட்ட தலைமை இராணுவத் தளபதி பதவி உயர்வானது ஒரு இனப்படு கொலையாளியை மேலும் பாதுகாக்கும் செயலாகவே கருதப்படு கின்றது. இச்செயலானது இலங்கையில் நீதிக்கும் பொறுப்புக் கூறலுக்கும் எந்த இடமும் இல்லை என்பதை பௌத்த பேரினவாதிகள் இன்னொரு முறை நிரூபித்துள்ளனர்.