சவுதியின் நவீன போர் விமானம் யேமனில் வீழ்ந்தது

சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படையினரின் அதிநவீன ரொனெடோ ரக போர் விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை (14) யேமனில் தாக்குதலில் ஈடுபட்டிருந்த சமயம் வீழந்து நொருங்கியுள்ளது.

இந்த விமானத்தை தாம் தரையில் இருந்து வானுக்கு செல்லுத்தும் அதிநவீன ஏவுகணை மூலம் சுட்டு வீழ்தியதாக யேமனில் போராடி வரும் கௌத்தி ஆயுதக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் விமானம் வீழ்ந்ததை அறிவிப்பதில் தாமதம் செய்த சவுதி அதிகாரிகள் பின்னர் அதனை உறுதிப்படுத்தியுள்ளனர். வடக்கு அல் ஜவா பகுதியில் போர் விமானம் வீழ்ந்து நொருங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ரொனெடோ ரக அதிநவீன விமானம் சுடப்பட்டிருந்தால் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனவும், அது கள நிலமையை மாற்றிவிடும் எனவும் அல்ஜசீரா செய்தி நிறுவனத்தின் அரசியல் ஆய்வாளர் மார்வன் பிசாரா தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படையினரின் ஆதரவுடன் யேமன் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 30 பொது மக்கள் கொல்லப்பட்டதாக கௌத்தி சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமை (14) தெரிவித்திருந்தனர். அதே இடத்தில் தான் விமானம் வீழ்ந்துள்ளது.