சர்வதேச அமைப்புகளில் இருந்து விலக தயங்கப் போவதில்லை- சிறிலங்கா அதிபர்

32

இலங்கை இராணுவ வீரர்களையும் நாட்டையும் தொடர்ந்து இலக்கு வைக்கும் சர்வதேச அமைப்புகளில் இருந்து விலக ஒருபோதும் தயங்கப் போவதில்லை என சிறிலங்கா அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

போரில் கொல்லப்பட்ட மற்றும் காணாமற்போன படைவீரர்களை நினைவுகூர்ந்து கௌரவிக்கும் தேசிய படைவிரர் ஞாபகார்த்த நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி பாராளுமன்ற மைதானத்தில் உள்ள தேசிய படைவீரர் ஞாபகார்த்த நினைவுத் தூபிக்கு அருகில் இடம்பெறுகிறது.

இதில், சர்வமதத் தலைவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், பாதுகாப்பு செயலாளர், முப்படைத்தளபதிகள் அடங்கலாக பல முக்கியஸதர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் உயிர்நீத்த படைவீரர்களின் ஆத்மசாந்திக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.