சனசமூக நிலையம் திறக்கப்படாமையால் தாய் மார் அசௌகரியம்!!நகரசபை உடனடி நடவடிக்கை!!

வவுனியா சின்னபுதுக்குளம் துர்க்கா சனசமூக நிலையம் மூடப்பட்டிருந்தமையால் மாதாந்த பராமரிப்பு சேவைகளை பெற்றுகொள்ள சென்ற தாய்மார்கள் அசௌகரியங்களிற்கு முகம் கொடுத்திருந்தனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் தாய்சேய் பராமரிப்பு சேவைகளை மேற்கொள்வதற்காக சின்னபுதுக்குளம் துர்க்கா சனசமூக நிலையத்திற்கு இன்றுயதினம் வருமாறு தாய்சேய் நிலைய உத்தியோகத்தர்களால் குறித்த பகுதியை சேர்ந்த தாய்மார்களிற்கு தெரிவிக்கபட்டிருந்தது.

அதற்கமைய இன்று காலை8 மணி முதல் தாய்மார்கள் தமது கைக்குழந்தைகளுடன் துர்க்கா சனசமூக நிலையத்திற்கு சென்றிருந்தனர். வழமையாக பத்திரிகை பகுதி இயங்குகின்றமையால் காலை வேளையிலேயே திறந்திருக்கும் குறித்த சனசமூக நிலையம் இன்று திறக்கப்படவில்லை.

இதனால் சிகிச்சைக்காக சென்ற தாய்மார்கள் கட்டடத்திற்கு முன்பகுதியில் வீதியின் கரையில் அமர்த்தப்பட்டு தாய்சேய் பராமரிப்பு சேவைகள் மேற்கொள்ளபட்டிருந்தது.

இதனால் குறித்த பகுதியில் ஒன்று கூடிய பொதுமக்கள் சனசமூக நிலைய நிர்வாகத்தின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன்.இது திட்டமிடப்பட்டு செய்யப்பட்டுள்ளதாக விசனம் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா நகரசபைக்கும் தெரியப்படுத்தப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்த நகரசபை தவிசாளர் கௌதமன்,உபநகரபிதா சு.குமாரசாமி வட்டார உறுப்பினர் நிறோயன் மற்றும் செயாளர் தயாபரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அதிகாரிகள் விடயம் தொடர்பாக ஆராய்ந்ததுடன் சனசமூக நிலையத்தின் நிரவாகத்தினருக்கு தொடர்பினை ஏற்படுத்தி நிலையத்தினை திறக்குமாறு தெரிவித்தனர். பின்னர் காலை 10 மணியளவில் நிலையத்தின் திறப்பு கொண்டுவரப்பட்டு தவிசாளர் கௌதமனால் சனசமூக நிலையம் திறக்கபட்டதுடன் பராமரிப்பு சேவைகளை மேற்கோள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறித்த பகுதியில் தாய் சேய் நிலையம் ஒன்று இல்லாத நிலையில் முன்னர் செயற்பட்டுவந்த கட்டடம் பழுதடைந்த காரணத்தினால்,பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தாய்சேய் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தது. அண்மையில் குறித்த சனசமூக நிலையம் திறந்துவைக்கப்பட்டதுடன் அங்கு தாய் சேய் சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு பொதுமக்கள் விருப்பம் தெரரிவித்துள்ளமையால் அதற்கான ஒழுங்கமைப்புகளை மேற்கொள்ளுமாறு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சனசமூக நிலைய நிர்வாகத்திற்கு வவுனியா நகரசபை தலைவரால் கடந்த 20 ஆம் திகதியே கடிதம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

சனசமூக நிலைய நிர்வாகத்தின் செயற்பாட்டிற்கு நகரசபை தவிசாளர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் இது மனிதாபிமானம் அற்ற செயல் என்றும் விசனம் தெரிவித்திருந்தார்.