கோவிட் -19 – வைத்தியராகவும் பணியாற்றப் போகிறார் அயர்லாந்து பிரதமர்

60

அயர்லாந்து பிரதமர் ராய்சேச் லியோ வராட்கார் மீண்டும் தனது மருத்துவத் தொழிலை ஆரம்பிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

அயர்லாந்து பிரதமர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் ஏழு வருடங்கள் வைத்தியராக பணியாற்றியிருந்தார். அவர் கடந்த மார்ச் மாதம் மருத்து பதிவு ஏட்டில் தனது பெயரை பதிவு செய்திருந்ததாக த ஜரிஸ் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

பகுதி நேரமாக மீண்டும் மருத்துவத்துறையில் பணியாற்ற அவர் தீர்மானித்துள்ளார். தொலைபேசியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கும் பணியை அவர் முதலில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளார்.

அவரின் மனைவியும், குடும்பத்தில் உள்ள வேறு சிலரும் மருத்துவத்துறையில் பணியாற்றி வருகின்றனர்.

அயர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 120 பேர் பலியாகியுள்ளதுடன், 4,273 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.