கோத்தபாயாவின் பயண அனுமதி நீடிப்பு

சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சாவின் வெளிநாட்டு பயண அனுமதியை சிறீலங்கா உயர் நீதிமன்றம் நீடிப்புச் செய்துள்ளது.

டி. ஏ ராஜபக்சா நினைவு தொல்பொருள் மண்டபத்தை கட்டியதன் மூலம் 33 மில்லியன் ரூபாய்களுக்கு மேல் அரச பணத்தை வீணாக செலவு செய்தது தொடர்பில் கோத்தபாயா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வெளிநாட்டுக்கான அவரின் பயணங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன. எனினும் மருத்துவ காரணங்களை காண்பித்தததால் அவருக்கு மே மாதம் 24 ஆம் நாளில் இருந்து ஜுன் 2 ஆம் நாள் வரையிலான பயண அனுமதியை நீதிமன்றம் வழங்கியிருந்தது.

ஆனால் சிங்கப்பூருக்கு அறுவைச் சிகிச்சைக்கு சென்றுள்ளதால் தனது பயண அனுமதியை மேலும் நீடிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் கோத்தபாய போட்டியிடவுள்ள நிலையில் அவர் மீது சிறீலங்காவிலும், வெளிநாடுகளிலும் அவசரமாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது நாம் அறிந்ததே.