கோட்டாவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு; முக்கிய விடயங்கள் ஆராய்வு

41

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடி முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார். இன்று காலை இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

கொரோனா வைரஸ் ஒழிப்பு செயற்பாடுகள் குறித்தும் இந்த விடயத்தில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்தும் இந்த உரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்தியாவின் முதலீட்டுப் பணிகள் இதர வர்த்தக செயற்பாடுகள் குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது. கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் இலங்கை எடுத்துவரும் நடவடிக்கைகளை இந்தியப் பிரதமர் பாராட்டினார் என்றும் தெரிவிக்கப்பட்டது.