கொரோனா பரிசோதனை எலிகளாக ஆபிரிக்கர்கள்;பிரான்ஸ் வைத்தியர்களின் இனவெறி பரிந்துரை

21

வைரஸ் தடுப்பூசி பரிசோதனையை ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளவேண்டுமென பிரெஞ்சு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளமை பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி விவாதமொன்றில் பங்கேற்ற போது அவர்கள் தெரிவித்த இந்த பரிந்துரையானது ஒரு இனவெறி கருத்தாக கொள்ளப்படுகிறது.

கொரோன வைரஸுக்கான தடுப்பூசி முதலில் ஆப்பிரிக்காவில் உள்ளவர்களுக்கு பரிசோதிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்ததற்காக இரண்டு பிரெஞ்சு மருத்துவர்கள் இனவெறி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

பிரெஞ்சு எல்.சி.ஐ. தொலைக்காட்சியில் ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் தொடங்கப்படவுள்ள கோவிட் -19 சோதனைகள் குறித்தும்,அங்கு பரிசோதிக்கப்படும் பி.சி.ஜி காசநோய் தடுப்பூசி கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுமா என்பது குறித்தும் பேசப்பட்டது.

‘இது பலருக்கு ஆத்திரத்தை உண்டாக்குவதாக அமையலாம். முகமூடிகள் இல்லாத, சிகிச்சையோ அல்லது தீவிர சிகிச்சையோ இல்லாத ஆபிரிக்காவில் முன்னராக விபச்சாரிகளிடையே மேற்கொள்ளப்பட்ட எய்ட்ஸ் பரிசோதனைகள் போன்றே நாங்கள் இந்த விடயங்களை செய்ய முயல்கிறோம்’

என பாரிஸில் உள்ள கொச்சின் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் தலைவர் ஜீன்-பால் மீரா

இந்த கருத்தை ஆமோத்தித்த பிரான்சின் தேசிய சுகாதார நிறுவனமான இன்செர்மின் ஆராய்ச்சி இயக்குனர் காமில் லோச்ட்

“நீங்கள் சொல்வது சரிதான். அதே அணுகுமுறையைப் பயன்படுத்தி அதற்கிணையாக ஆப்பிரிக்காவில் ஒரு ஆய்வு மேற்கொள்வது பற்றி நாம் சிந்திக்கிறோம்.” என்று தனது பங்கிற்கு கூறினார்.

இந்த கருத்து பலவேறு தரப்புகளால் கண்டிக்கப்பட்டு வருகிறது.

“ஆப்பிரிக்கா ஒரு சோதனை க் கூடமல்ல அல்ல” “இழிவான, பொய்யான மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக ஆழ்ந்த இனவெறி வார்த்தைகளை நான் தெளிவாகக் கண்டிக்க விரும்புகிறேன்.”என்று கால்பந்து வீரர் டிடியர் ட்ரோக்பா ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

“இது ஆத்திரமூட்டல் அல்ல, இது வெளிப்படையான இனவாதம்
ஆப்பிரிக்கா ஐரோப்பாவின் பரிசோதனைக்கூடமல்ல அல்ல. ஆப்பிரிக்கர்கள் எலிகள் அல்ல!”என பிரான்சின் சோசலிஸ்ட் கட்சியின் ஒலிவர் கூறினார்.

பிரான்சின் SOS இனவெறி எதிர்ப்புக் குழு வெளியிட்ட அறிக்கையில்

“ஆப்பிரிக்கர்கள் கினிப் பன்றிகள் அல்ல”, இங்கு எய்ட்ஸ் மற்றும் விபச்சாரிகளை ஒப்பிடுவது “சிக்கலானது” மற்றும் “விரும்பத்தகாதது”
எனக்கூறப்பட்டுள்ளது.

இவர்களது இந்த கருத்துக்கள் பிரான்சினது காலனித்துவ,இனவெறி மனோபாவத்தின் இன்னும் நீடித்திருக்கும் எச்சமாகவே கருதவேண்டியுள்ளது என்கிறார்கள் நோக்கர்கள்.