கொரனா இல்லை-வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நோயாளர்

21

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேற்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இருந்து அனுமதிக்கப்பட்டவருக்கு கொரனா தொற்று இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

குறித்த நபர் இன்று சிகிச்சையின் பின்னர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த ஒருவர் இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக கொரனா சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனைகளுக்கா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.

இவர் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவருவதற்கு அப்பகுதி மக்களும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர்.

எனினும் அவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் எந்தவித தொற்றும் இல்லாத காரணத்தினால் அவர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.