கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு

136

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் கொக்கட்டிச்சோலை பகுதியில் கடந்த 1987,ஜனவரி.28,ம் திகதி இடம்பெற்ற மிகப்பெரிய இனப்படுகொலையாக கருதப்படும் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு எதிர்வரும் 28/01/2020, செவ்வாய்கிழமை பி.ப:2,மணிக்கு மகிழடித்தீவு சந்தி “கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபி” முற்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தலைமையில் இடம்பெறும்.

வயல்நிலங்களையும் நீர்ப்பாசன வசதிகளையும் கொண்ட மண்முனைத்துறைக்கும் மகிழடித்தீவிற்கும் இடைப்பட்ட வயல்பிரதேசத்தில் அமெரிக்க கொங்கொங் கூட்டு நிறுவனமான செரன்டிப் சீபூட் நிறுவனம் அமைத்திருந்த இறால் பண்ணையில் வேலை செய்தவர்களையும் மகிழடித்தீவை அண்டிய கிராமங்களை சேர்ந்த மக்களையுமே 1987 ஜனவரி 28ஆம் திகதி அன்று சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் படுகொலை செய்தனர்.

இந்த வணக்க நிகழ்வில் நினைவுத்தூபிக்கு 33, தீபச்சுடர்கள் ஏற்றி வணக்கம் செலுத்துவதுடன் நினைவுப்பேருரைகள், நினைவுக்கவிதை அரங்கம், உட்பட பல நிகழ்வுகள் இடம்பெறும்.