கைவேலி கணேசா மைதானத்தில் வெற்றுப்பெட்டிகள் மீட்பு

54

கைவேலி கணேசா வித்தியாலய மைதானத்தில், படையினரால் புதைக்கப்பட்ட வெற்று வெடிபொருள் பெட்டிகள், இன்று மீட்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு கைவேலி கணேசா வித்தியாசாலைக்குமுன்னால், வௌ்ளிக்கிழமை (31) விளையாட்டுப்போட்டிக்காக கொடிகம்பம் நாட்டுவதற்கு கிடங்கு கிண்டியபோது பெட்டிகளில் அலவாங்கு குத்தி சத்தம் கேட்டுள்ளது.

இதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து இடத்தை அடையாளப்படுத்தியுள்ளதுடன், பொலிஸ் பாதுகாப்பு போட்டுள்ளார்கள்.

இந்நிலையில், நேற்று (01), குறித்த பகுதியை உடனடியாக அகழ்வதற்கு நீதிமன்ற அனுமதி எடுக்கப்பட்டு, இன்று (02), சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு குறித்த பகுதியை அகழ்ந்த போது, 81 மில்லிமீற்றர் எறிகணைகள் வைக்கும் 13 பெட்டிகள் மண்கள் போட்டு நிரப்பப்பட்ட நிலையில் நிலத்துக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

சிறப்பு அதிரடிப்படையினர், குறித்த பகுதியை துப்புரவு செய்து, அகழ்வு செய்த இடத்தை மூடிவிட்டு வெறும் பெட்டிகளையே எடுத்து சென்றுள்ளனர்.