கீழடி அகழாய்வில் ஐந்தரை அடி நீளமுள்ள மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

89
5 Views

கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நான்கு இடங்களில் நடைபெற்று வரும் அகழாய்வில், நேற்று கொந்தகையில் ஐந்தரை அடி நீளமுள்ள மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

6ஆம் கட்ட அகழாய்வின் போது, பல அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நீள வடிவ பச்சை நிற பாசிகள், விலங்கின் எலும்பு படிமங்கள், குழந்தைகளின் எலும்புக்கூடுகள், மண் பானைகள், முதுமக்கள் தாழிகள், சிறிய உலைகலன், ஓடுகள், உறை கிணறு, எடைக் கற்கள் போன்ற பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தற்பொழுது முதன்முறையாக முழு உருவ மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 முழு உருவ குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் முதல்முறையாக ஐந்தரை அடி முழு உருவ எலும்புக்கூடு கிடைத்துள்ளது. இந்த எலும்புக்கூட்டின் காபன் ஆராய்ச்சி செய்யப்பட்டு அதன் வயதும் காலமும் கணிக்கப்படவுள்ளது.

தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் யாவும் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் என்று தொல்லியல்துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கீழடியின் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நிறைவடையவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here