கிழக்கின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்க செலணி: கோட்டா

30

கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள்முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்து முழுமையான ஆய்வொன்றை மேற்கொண்டு அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக பாதுகாப்பு செயலாளர் தலைமையில் செயலணியொன்று உருவாக்கப்படும் என சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பௌத்த ஆலோசனை சபையினருடான சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பாக எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை உயர்ந்த அளவில் நிறைவேற்றுவேன் என தெரிவித்துள்ள ஜனாதிபதி, இந்த நோக்கத்திற்காக நிபுணத்துவம் மிக்கவர்களை திறமை வாய்த்தவர்களை இந்த பணிக்காக நியமித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரங்களை கையாள்வதற்கு புலனாய்வு பிரிவினருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பயங்கரவாத தீவிரவாத நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானிப்பதற்கான அதிகாரம் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்