Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் காலத்தேவை ‘ஈழத்தமிழர் உரிமைகள் வலை’

காலத்தேவை ‘ஈழத்தமிழர் உரிமைகள் வலை’

‘கொவிட் -19’ தொற்று மனித வாழ்வியலின் எல்லாநிலைகளிலும் பலத்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் தனிமைப்படுத்தித் தன்னையும் மற்றைய மனிதர்களையும் காக்கும் பொறுப்பு என்பது, தனிமனித நிலையிலும் சமுகமனித நிலையிலும் மனித உரிமைகளையும் மக்கள் உரிமைகளையும்ää தனி மனிதன் நிலைநாட்ட வேண்டியதாகவும்,அதற்கு அந்த மக்களை ஆட்சி செய்யும் அரசாங்கம் உரிய பாதுகாப்பையும், அடிப்படை மனிதத் தேவைகளையும் பாதிப்படையாது பேண வேண்டியதாகவும் உள்ளது.

இதனைத் தனிமனிதன் தன் மனித உரிமைகளையும் மற்றவர்களின் மனித உரிமையையும் சமமாக மதித்து தன்னளவில் மனித உரிமைகளுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் முக்கியத்துவம் அளித்து,. பொதுமனிதவாழ்வில் சுரண்டலும் ஒடுக்கலும் இடம்பெறாதவகையில் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்தல் வேண்டும். இதனை அரசாங்கம்,சட்ட உருவாக்கம், சட்ட நிர்வாகம்,சட்ட அமுலாக்கல் மூலமாக எந்தவித வேறுபாடுகளும் காட்டாது உறுதி செய்தல் அவசியமாகிறது.

அதே வேளை தனிமனித நிலையிலும் சமுகமனித நிலையிலும் உணவு, இல்லிடம்ä, மருத்துவம் என்பன தடையின்றி இயன்ற அளவு அனைவருக்கும் கிடைப்பதற்கான மூலவளங்களையும் நிதிவளத்தையும் மனித வளத்தையும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கிக் கொண்டு இருத்தலும் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.

ஆனால் இலங்கையில் ஈழத்தமிழர்களையும் தனது குடிகளாக உலகுக்கு வெளிப்படுத்தி வரும் சிறிலங்கா அரசாங்கம்,இந்த ‘கொவிட் -19’ வாழ்வு தொடங்கிய நாள் முதலில் இருந்து இன்று வரை சிங்கள பௌத்த இன மக்களுக்கு அளிக்கும் சேவைகள் பாதுகாப்புகளுக்கு முதன்மையளித்தல் என்னும் பௌத்த சிங்கள மகாவம்ச மனோநிலையில் இருந்து பெரிதளவில் விடுபடவில்லை என்பதற்குப் பல்வேறு சான்றுகள் வெளிவருவதை அனைவரும் அறிவர்.

இந்த நிலையில்ää யாழ்ப்பாண சமுக மருத்துவ ஆலோசக மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரம் அவர்களது கடமைப் பொறுப்பு வாய்ந்த தகவல் பரிமாற்றத்தைக் கூட ‘இனஅழிப்புச் சமுதாயச் சிந்தனை’ நோக்கில் சிறிலங்காவின் அரசமருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் கரித அலுத்கே ‘ஏற்றுக்கொள்ள முடியாத சர்ச்சைக்குரிய’ ஒன்றென விமர்சித்து மேல்விசாரணையை கோரியுள்ளமைää படித்த சிங்கள இனத்தவர்கூட இந்த ‘இனஅழிப்புச் சமுதாய சிந்தனைப் போக்குக்கு விதிவிலக்கானவர்களல்ல என்பதனை மேலும் நிரூபித்துள்ளது.

இவ்வாறான இனஅழிப்புச் சமுதாய சிந்தனை உள்ள பெரும்பாலான சிங்கள மக்களையும்,இந்த இனஅழிப்புச் சிந்தனையையே தமது அரசியல் கொள்கையாக்கிச் சிங்கள பௌத்த அரசாகவே சிறிலங்கா அரசாங்கத்தை வெளிப்படுத்துவதில் பெருமைபெறும் அரசாங்கமும் உள்ள இலங்கைத் தீவில் சிங்களப் படைத்தலைமைகளின் மேலாண்மையையே ‘கொவிட் 19’ தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மட்டுமல்ல அதன் பின்னரான இன்று வரையான வாழ்வியலிலும் கூட காணக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில் கொவிட் 19 ஆல் இறந்தவர்களின் உடலங்களை எந்த விசாரணையுமின்றி எரிக்கலாம் என்னும் அரசவர்த்தமானிப் பிரகடனம் இதே போன்று படைகளுக்கு உடலங்களை விசாரணையின்றி எரிப்பதற்கான அதிகாரத்தை 1979களில்ää அன்றைய சிறிலங்கா அரச அதிபர் ஜே. ஆர் ஜெயவர்த்தனா வழங்கிய பின்னர் தமிழின அழிப்புக்கு அது பயன்பட்ட வரலாற்றைää ஈழத்தமிழர்கள் மீள்நினைந்துää இனங்காணக் கூடிய அச்சவாழ்வுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த இனங்காணக்கூடிய அச்சத்தை ஈழத்தமிழர் தாயகப் பகுதிகளில் வாழும் முஸ்;லீம் மக்களும் அடைந்துள்ளனர்.
இவ்வாறான சூழலில் ஈழத்தமிழர்களதும், ஈழத்தமிழர் தாயகப்பகுதிகளில் வாழும் முஸ்லீம் மக்களதும் மனிதஉரிமைகள் விடயங்களை, இந்த ‘கொவிட் 19’ காலத்தில் உலகின் மனித உரிமை அமைப்புக்களும், மனிதஉரிமைஆர்வலர்களும், உடனுக்குடனும் தொடர்ந்தும் அறியவும், அவதானிக்கவும்,உரியன செய்யவும் கூடிய, முழுமையான ‘ஈழத்தமிழர் உரிமைகள் வலை’ ஒன்று இன்றைய ‘கொவிட்-19’ காலத்தின் உடன் தேவையாகிறது. புலம்பெயர் தமிழர்கள், தாயகத்து ஈழத்தமிழர்கள், உடனுழைப்பு மூலம் இது உடன் நடைமுறைப்படுத்தப்பட்டாலே ‘கொவிட் -19’ கால வாழ்வில் ஈழத்தமிழர் உரிமைகளை உலகால் ஒரளவுக்காவது பாதுகாக்க இயலும்.

-இலக்கு மின்னிதழ்-

Exit mobile version