காத்தான்குடி கொரோனா சிகிச்சை நிலையத்தில் 27 பேர் அனுமதி

28

மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் உள்ள கொரனா தொற்று சிகிச்சை நிலையத்தில் 27பேர் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 25பேருக்கு கொரனா உறுதிப்படுத்தபடுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கந்தக்காடு தனிப்படுத்தல் முகாமில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் 25பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இரண்டு சிறுவர்களுக்கு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கொரனா சிகிச்சைப்பிரிவாக மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.