காத்தான்குடியில் பெண்களுக்கான பயிற்சி முகாம் சுற்றிவளைப்பு

56

மட்டக்களப்பு, காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு பகுதியில் உள்ள கடற்கரை ஓரத்தில் உள்ள விடுதியொன்று இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடுதி உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் தனது உறுப்பினர்களுக்கு பயிற்சியளித்த பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல்களையடுத்தே இந்த சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,காத்தான்குடி காவல்துறையினர் ,விசேட அதிரடிப்படையினர் மற்றும் கொழும்பில் இருந்து வருகைதந்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் குறித்த விடுதியில் சோதனைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இதேபோன்று அதனை அண்டிய பகுதிகளிலும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.குறித்த விடுதியில் து தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுத்தகவல்கள் தெரிவித்தன.