காட்டுத் தீயில் கருகி நொந்திடும் கங்காரு வாழ் கடல்சூழ் கண்டம்-பரமபுத்திரன்

காட்டுத்தீ என்பது புவியில் தோன்றிய ஒரு புதிய செய்தியாக அல்லது சவாலாக சொல்லமுடியாது. ஆதி முதல் தீ பூமியினை பாகம் பாகமாக உண்டுதான் வந்திருக்கின்றதுஅது மட்டுமல்ல அதன் சுவாலை மூலம் அனலை உமிழந்துதான் உள்ளது.

பூமியின் காடுசூழ்பகுதிகள் மட்டுமல்ல புவியின் எந்த ஒரு பகுதியிலும் தீ உருவாகும் நிலை உண்டு.இவ்வாறுஉருவாகும் தீ வேகமாக பரவுவது மட்டுமல்ல தன்னை சூழவுள்ள அனைத்தையும் எரித்துஅழிப்பது என்பதும் வழமையான ஒன்று. ஆனால் காடுகளில் தீ உருவாகும் போது

கட்டுப்படுத்துவது கடினம்.அது மட்டுமல்ல இது ஈரவலயம் உலர்வலயம் ஆகிய இரண்டிலுமேதீ உருவாதல் பரவுதல் இரண்டுமே நடக்கக்கூடிய ஒன்று. ஆனால் இன்றைய மாற்றங்களுக்குஎன்ன காரணம் அதனை கொஞ்சம் ஆராய்வோம்.

நிலம் நீர் தீ வளி விசும்பு ஐந்தும் கலந்த மயக்கம் இந்த உலகம்.

நாம் வாழும் கோள் புவி.இது ஐம்பூதங்களின் கலவை அதாவது இந்த உலகமானது நிலம்இ நீர்இவளிஇ நெருப்புஇ ஆகாயம் இந்த ஐந்தும் கலந்து உருவாகி உள்ள ஒன்று என்று தொல்காப்பியம்கூறுகின்றது.

அதுவும் ஒரே அளவில் அல்லஇ வேறுபட்ட அளவில் கலந்துள்ளது.அந்தஅளவுமாறினால் புவியின் சமநிலை குழம்பும் என்பது தமிழன் விதி. நாட்டிலே காட்டுத்தீ இவன் பேசுவதோ வேதாந்தம் என்ற எண்ணம் இப்போது உங்களுக்கு எழும். காரணம் உலகில்இருவகையினரை வேறுபடுத்தலாம்இ அவர்கள் சிந்தாந்திகளும் வேதாந்திகளும் எனக்கூறலாம்.

சித்தாந்தி உடன் நடப்பதை மட்டும் சிந்திப்பான்.வேதாந்தி ஏறதாழ உலக இயக்கதை முற்றாகபுரிந்துகொள்பவன். அதனால் தான் வேதாந்தமென்பது எமக்கு புரியாதது என்ற கருத்தினைதருகின்றது. நான் வேதாந்தி அல்ல. ஆனால் விஞ்ஞானம் வேதாந்தம் என்றுதானேசொல்லவேண்டும். ஏனென்றால் உலகம் ஆரோக்கியமாக வாழ உழைப்பது வீண்காணம்என்றுதானே நாம் நம்புகின்றோம். அந்த வினஞானம் உலகம் வலய உழைக்கிறாத என்ற கேள்வி எழும் அல்லவா.

புவி தோன்றியகாலம் முதல் மாற்றங்கள் நிகழ்ந்தே வந்ததாக வரலாறுகள் காட்டுகின்றன.அந்த வகையில் இன்றைய காலம் தொடர்பாடல் ஊடகங்கள் செலுத்தும் காலம்.வகைதொகையின்றி தொடர்பாடல் ஊடகங்கள் பெருகிவிட்டன. கட்டுப்பாடற்று அவைபரம்பலுற்றுள்ளன. ஒவ்வொருநாளும் புதிதுபுதிதாக தொடர்பாடல் உபகரணங்கள்உருவாக்கப்படுகின்றன.

அநேகமான மனிதர்கள் தங்களை இனங்காட்ட இந்த ஊடகங்களை பயன்படுத்த விரும்புகின்றனர். தொலைக்காட்சிகள்இ இணையதளங்கள்  மட்டுமல்ல ஒவ்வொருவரதும் கைபேசிகள் கூட தொடர்பாடல் ஊடகங்களாக தொழிற்படும் நிலைக்குவந்துவிட்டன. எல்லோருமே செய்தியாளர்கள் ஆகிவிட்டனர். எனவே செய்தி மட்டுமே தேவைப்படுகின்றது. சரி எது பிழை எதுஇ உண்மை எது பொய் எது நன்மை என்ன தீமைஎன்ன என்ற பேச்சுக்கே இடமில்லை.

முதலில் செய்தி போடவேண்டும்.இப்படி ஒருவர்செய்திகளை போடுவதும்,அடுத்தவர் எதிராக செய்தி தெரிவிப்பதும்இ ஒருவருக்கொருவர் மறுப்புகள் பரிமாறுவதும் தேவையற்ற செய்திகளை பரப்புவதும், மிகைப்படுத்திய செய்திகளை அறிவிப்பதும் மொத்தமாக மக்களை குழப்பத்தில் தள்ளிவிடுகின்றன.

இதன் விளைவு எந்த ஒரு செய்தியையும் மக்கள் பெரிதாக எடுப்பதில்லை. அதேவேளை உண்மையான சமுதாய அக்கறையுள்ள செய்தியாளர்கள் இன்று எம்மத்தியில் உள்ளார்களா என்பது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய செய்தி. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கேள்விப்பட்டியலுக்கு அமைவாக வினாக்கள் வினவப்படுகின்றன.

எல்லோரும் ஏதோ ஒரு ஊடகத்தின் வாயிலாக தங்களுக்கு கிடைத்தசெய்திகளை தங்கள் நண்பர்களுக்கு பரப்புகிறார்கள். அது தொடர்கிறது.எனவே மக்களுக்குஅது செய்தியாக அல்ல பொழுதுபோக்காக அமைகிறது. ஒரு செய்தி கிடைத்து அதுவாசிக்கப்பட முன்பு அடுத்த செய்தி வருகின்றது. எனவே வாசித்தது பற்றி யோசிக்க நேரம் கிடைப்பதில்லை.

அதனால் எல்லோரும் செய்திபோட நினைக்கிறார்களே தவிரஇ தன்பங்குஎன்ன என்று நினைப்பதில்லை ஒருவருக்கும் பிறரின் துன்பம் புரியவில்லை.செய்திபோட்டால் போதும் என்று மட்டும் நினைக்கிறார்கள்.

இந்த நிலையின் வளர்ச்சிதான் இன்று காட்டுத்தீ மட்டுமல்ல, ஒருவரின் அல்லது ஒருசாராரின் எந்த ஒரு துன்பநிலையும்பிறமக்களால் கணக்கெடுக்கப் படுவதேயில்லை. இன்னும் காட்டுத்தீயை பேசவில்லை.காட்டுத்தீ என்பது தனித்து அவுத்திரேலியாவில் மட்டும் நடக்கும் ஒன்றல்ல.காடுள்ளநாடெங்கும் நடக்கின்றது.

செய்தி பரப்புபவர்கள் ஒரு புறம் செய்தி பரப்பஇ மறுபுறம் வியாபாரிகள் ஊக்கமடைகின்றனர். பணம் தேடலுக்கு இதனை பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமல்ல,உதவி செய்யும் அமைப்புகள் உருவாகின்றன. இந்த நேரத்தை பயன்படுத்தி தங்களை விளம்பரப்படுத்தி விடுகின்றன. ஏற்கனவே இயங்கும் நிறுவனங்களும் நிலைமையினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன.

முழுவதுமாக பார்த்தால் வெந்து கருகி நொந்தவர்கள் போக அதிக பயன் அடைபவர்கள் யார் என்று சிந்திக்கும் கட்டாயம்உண்டு.

எனவே காட்டுத்தீ பரவுகின்றது என கதறுவோர் உண்மையில் நாட்டுக்கு நன்மைதரும் விதத்தில் சிந்தித்தாலே பலன் உண்டு. இல்லையேல் அது சுயவிளம்பரேமே தவிரவேறில்லை என்று சொல்லமுடியும்.