ஐ.நா தீர்மானம் மீளாய்வு செய்யப்படும் – சிறீலங்கா அரசு

87

அமெரிக்காவின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்டு 2015 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் 30/1 தீர்மானம் மீளாய்வு செய்யப்பட்ட பின்னரே அது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சிறீலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனா நேற்று (25) தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசு மேற்கொண்ட உடன்பாடுகள் அனைத்தும் மீளாய்வு செய்யப்படும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு கொண்டுவந்த தீர்மானத்தின் ஒவ்வொரு சரத்துக்களும் ஆராயப்படும். அது ஒருபக்கச் சார்பாக இருக்க முடியாது.

முன்னைய அரசு அமெரிக்காவுடன் மேற்கொண்ட சோபா உடன்பாடு மற்றும் மிலேனியம் சலஞ் உடன்பாடு போன்றவை தொடர்பிலும் மீளாய்வு செய்யப்பட்ட பின்னரே முடிவெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.