ஐக்கிய இராச்சியத்தில்  கொரோனா பலி 44,000;முதியோர் இல்லங்களில் இழப்பு 10,000

35

ஐக்கிய இராச்சியத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 44 ஆயிரத்தை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக வந்த தரவுகளின்படி பிரிட்டனில்கொரோனா தொற்றுக்கு 44,00 பேர் வரை பலியாகி உள்ளனர். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் இந்த இறப்பு எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த இறப்பு எண்ணிக்கையில் 10,000 மூதாளர் இல்லங்களில் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

கொரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு 92,000 மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து இடத்தில் பிரிட்டன் உள்ளது.

இந்த நிலையில் கரோனா வைரஸ் நெருக்கடியை பிரதமர் போரிஸ் ஜான்சன் சரியாகக் கையாளவில்லை என்று விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.