ஏணிப்படி விவகாரத்தில் ஆலய நிர்வாகத்திற்கு பிணை! வீடியோ இணைப்பு

175
11 Views

வெடுக்குநாரி ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஏணிப்படி அமைத்தமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆலய நிர்வாகத்தினர் சொந்தப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயபகுதியானது தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என தெரிவித்து பொதுமக்கள் வழிபடுவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களின் தொடர் போராட்டங்களால் வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கபட்டதுடன் ஆலயவளாகத்தில் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களம் மற்றும் நெடுங்கேணி போலிசாரால் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வெடுக்குநாரி மலையில் பக்தர்கள் ஏறுவதற்கு வசதியாக இரும்பினால் அமைக்கபட்ட ஏணிப்படி ஒன்று அப்பகுதி மக்களால் அண்மையில் பொருத்தப்படது.

குறித்த ஏணிப்படி பொருத்தியமைக்கு எதிராக ஆதி லிங்கேஸ்வர்ர் ஆலயத்தின் நிர்வாகத்திற்கு எதிராக தொல் பொருட்திணைக்களம் நெடுங்கேணி பொலிசாரூடாக வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

குறித்த வழக்கு வவுனியா நீதவான் நீதி மன்றில் இன்றயதினம் விசாரணைக்குவந்தது.இதன்போது ஆலயத்தின்தலைவர் சசிகுமார், செயலாளர் தமிழ்செல்வன், பூசகர் மதிமுகராசா ஆகியோர் சமூகமளித்திருந்தனர். அவர்கள் சார்பாக சிரேஸ்ட சட்டதரணி மு.சிற்றம்பலத்தை தலைமையாக கொண்ட ஜந்திற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆயாராயிருந்தனர்.

இதன்போது நீதி மன்றில் ஆஜராகியிருந்த பொலிசார் ஏணி படிகள் பொருத்தப்பட்ட விடயத்தில் ஆலய நிர்வாகத்தினரை கைதுசெய்யவேண்டும் என தெரிவித்திருந்தனர். எனினும் குறித்த ஆலயம் தொல்பொருட்திணைக்களத்திற்கு சொந்தமானது என வர்தமானியில் பிரசுரிக்கப்படாமையினால் கைதுசெய்யமுடியாது என நீதிபதி தெரிவித்ததுடன், ஒருவருக்கு தலா 50ஆயிரம்படி ஒரு இலட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான சொந்தப்பிணையில் மூவரையும் விடுவித்திருந்தார்.

குறித்த வழக்கு எதிர்வரும் வருடம் ஜந்தாம் மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here