என்னையும் கைது செய்யுங்கள்: அரசாங்கத்திடம் கோரும் மனோ

51

அரசால் கைது செய்யப்படுபவர்களின் வாக்கு வங்கி அதிகரிப்பதால், தன்னையும் அரசு கைது செய்யவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்துடன் எதிரணியினரை வேட்டையாடும் நடவடிக்கையைக் கைவிட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறை வேற்றுமாறு அவர் அரசைக் கேட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி தொடர்பாக விசாரணையை நடத்துமாறும் அர்ஜூன மகேந்திரனைச் சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வருமாறும் தெரிவித்த அவர், அவ்வாறு விசாரணை செய்யுமிடத்தில் நல்லாட்சி அரசில் இருந்த அழுக்கை விட அதற்கு முன்னைய அரசில் இருந்த பெருமளவான அழுக்குகளும் வெளிவரும் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் வழக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய தோட்டத் தொழிலாளர்களுக்கு வழக்கப்படுவதாகத் தெரிவித்த ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அரசைக் கோரியுள்ளார்.