ஊரடங்கு சட்டத்தின்போது இவற்றிற்கு வழங்கப்படவுள்ள அனுமதி!

34

கொழும்பு உள்பட வெளிமாவட்டங்களிலிருந்து அத்தியாவசிய உணவுப் பொருள்களை ஏற்றி வரவும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு உள்ளூர் உற்பத்திப் பொருள்களை எடுத்துச் செல்லவும் வாகனங்களுக்கு வழி அனுமதி வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டாலும் உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்றது.

அதிலும் குறிப்பாக இத்தாலி பிரான்ஸ் ஸ்பெயின் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்து வருகின்றது.

ஸ்ரீலங்காவிலும் தற்போதுவரை 102 கெரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்

இதேவேளை கொழும்பு உள்பட வெளிமாவட்டங்களிலிருந்து அத்தியாவசிய உணவுப் பொருள்களை ஏற்றி வரவும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு உள்ளூர் உற்பத்திப் பொருள்களை எடுத்துச் செல்லவும் வாகனங்களுக்கு வழி அனுமதி வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.

எனவே சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் சாரதி மற்றும் உதவியாளரின் பெயர்களைப் பதிவு செய்யுமாறும் அவர் கேட்டுள்ளார்.

மேலும் வாகனத்தின் சாரதி, உதவியாளரது பெயர், தேசிய அடையாள அட்டை, வாகன இலக்கம், யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு எடுத்து வருகின்ற பொருள்கள் ஆகிய விவரத்துடன் உரிய பிரதேச செயலரது பரிந்துரையைப் பெற்று அலுவலக நாள்களில் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை மாவட்டச் செயலகத்தின் பரிந்துரையைப் பெற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் யாழ்ப்பாணம் இராணுவ சிவில் பாதுகாப்பு அதிகாரியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும் – என தெரிவித்துள்ளார்.