ஆம்பன் புயலால் 1.9கோடி குழந்தைகள் நெருக்கடிக்குள்ளாவார்கள் – யுனிசெப்

50

வங்கக் கடலில் உருவான உம்பன் புயலால் இந்தியா மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த 1.9கோடி குழந்தைகள் கடும் நெருக்கடியைச் சந்திப்பார்கள் என்று சர்வதேச குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான ஆம்பன் புயல் நேற்று(20) கரையைக் கடந்தது. மேற்கு வங்க மாநிலத்திலுள்ள திஹா மற்றும் வங்கதேசத்திலுள்ள ஹதியா இடையே இந்த புயல் கடக்கும் போது நான்கு மணி நேரத்திற்கும் அதிகமாக 160 – 170 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகின.

புயல் காரணமாக 5இலட்சம் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 72பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உம்பன் புயலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இந்தியா, வங்கதேசத்தில் 1.9கோடி குழந்தைகள் பாதிப்பிற்குள்ளாவார்கள் என்று சர்வதேச குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.