உதவி கேட்கிறார் பிரேசில் பழங்குடித் தலைவர்

93

கோவிட்-19 நோயினால் பாதிக்கப்படும் தமது இனத்தை காப்பாற்றுமாறு பிரேசிலில்; வாழும் பழங்குடி மக்களின் தலைவர் ஜேனியா வபிசனா உலக சுகாதார நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எமது பகுதிகளில் அவசரகால முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். தற்காப்பு உபகரணங்கள் எமக்கு வழங்கப்பட வேண்டும். கிராமங்களில் உள்ள சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு தற்காப்பு உபகரணங்கள் போதுமானதாக இல்லை என அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.