உணவுப் பொருட்களின் விலை ஐந்து மடங்கு அதிகரிப்பு – ஐ.நா

55

உணவுப் பொருட்களின் விலை உலகில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயத்திற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை (9) வெளியிட்டுள்ள அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உணவுப் பொருட்களின் விலைச்சுட்டெண் இந்த மாதம் 2.5 புள்ளியால் அதிகரித்துள்ளது. தாவர எண்ணை, சீனி மற்றும் பால் பொருட்களின் விலையே அதிகம் உயர்ந்துள்ளது. கடந்த மதம் இந்த பொருட்களின் விலைச்சுட்டெண் 181.7 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வருடம் விலைச்சுட்டெண் 171.5 ஆக இருந்ததுடன், தாவர எண்ணையின் விலைச் சுட்டெண் கடந்த மாதம் மிகவும் அதிகரித்துள்ளதாகவும், இது கடந்த 25 மாதங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.