Tamil News
Home செய்திகள் உணவுப் பற்றாக்குறையை நீக்க வடக்கு கிழக்கை நம்பும் ஜனாதிபதி இராணுவத்தை களமிறக்க திட்டம்

உணவுப் பற்றாக்குறையை நீக்க வடக்கு கிழக்கை நம்பும் ஜனாதிபதி இராணுவத்தை களமிறக்க திட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக வடக்கு கிழக்கில் நெல் உற்பத்தியை மேம்படுத்த ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ விசேட வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளார்.

வடக்கு கிழக்கில் அதிக நெல் விளையும் பகுதிகளை கண்காணிக்க இராணுவத்தைப் பயன்படுத்தவும் ஜனாதிபதி பணித்துள்ளார்.

நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறை காரணமாக தேசிய விவசாய வேலைத் திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது.

இதேவேளை மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நாட்டில் உள்ள அனைத்து நெல் ஆலை உரிமையாளர்களின் சேவைகளை மீள் அறிவித்தல் வரை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

மக்களின் நெல் உற்பத்தியின் அவசியத்தையும், களஞ்சியப்படுத்தலின் அவசியத்தையும் கருத்தில் கொண்டு அனைத்து நெல் ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக கருத்தில் கொண்டு திறக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version