ஈஸ்டர் தாக்குதல்; முக்கிய விடயங்களை வெளியிடுவதற்கு தயாராகும் மைத்திரி, ரணில்

38
56 Views

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பல விடயங்களை வெளியிட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தயாராகி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 5 ஆம் திகதியும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஒக்ரோபர் 6 ஆம் திகதியும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நிச்சயமாக பதிலளிப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுதவிர மேலும் பல சர்ச்சைக்குரிய உண்மைகளை வெளிப்படுத்துவேன் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னணி உறுப்பினர்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், இந்த ஆணைக்குழுவிடம் பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்தத் தான் தயார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சிறிகொத்தவில் வைத்து தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here