இளையவருக்கு வாழும் வாயப்பை வழங்கி மரணத்தை தழுவிய இத்தாலியப் பாதிரியார்

இத்தாலியில் சுகாதாரத்துறையால் கையாளும் நிலையை கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை கடந்துள்ள நிலையில் புதிய கடும் சுகவீனமடையும் புதிய நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் வழங்கி அவர்களை காப்பாற்ற முயல்வது முடியாமல் ஆகியுள்ளது.

இந்நிலையில் இத்தாலியின் தலைமைப் பாதிரியார்களில் ஒருவர் 72 வயது நிரம்பிய ஜுசுப்பி பெரடரெல்லி அவர்கள் கோவிட்-19 நோய்த் தொற்றிக்கு உள்ளாகி கடுமையான நிலையை ஏய்தினார். இவரைக் காப்பாற்றவென இவரது மக்கள் தங்கள் பணத்தில் ஒரு செயற்கை சுவாசம் வழங்கும் இயந்திரத்தை கொள்வனவு செய்து இவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த பாதிரியார் அதனை முகம் தெரியாத இளையவர் ஒருவரின் உயிரை காப்பாற்ற வழங்கி தனது உயிரை மாய்த்துள்ளார். இதுவரை 50க்கு மேற்ப்பட்ட கத்தோலிக்க பாதிரிகள் இத்தாலியில் மரணத்தைத் தழுவியுள்ளனர்.

இத்தாலி சீனாவிற்கு அடுத்து 64 ஆயிரம் நோய்த் தொற்றாளர்களையும் சீனாவை விட இரட்டிப்பாக 6 ஆயிரத்து 400 இறப்புக்களையும் இதுவரை பதிவு செய்துள்ளது. அதேவேளை நோய்த் தொற்றாளர்களிலும் இறப்புக்களிலும் பெரும் எண்ணிக்கையில் சுகாதாரத்துறை பணியாளர்களும் அடங்குவர் என்பதே இத்தாலியின் துன்பியல் நிலை. இவர்களுக்காக மரணித்துப் போன பாதிரியார் கடந்த வாரம் செவ்வாய் விசேட பிராத்தனைகளை வேறு மேற்கொண்டிருந்தார்.

Nehru Gunaratnam