இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து மோட்டார் வண்டியுடன் மோதி விபத்து- பெண்னொருவர் படுகாயம்

வவுனியாவில் பேரூந்து – மோட்டார் சைக்கில் விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வவுனியா ஏ9 வீதி தாண்டிக்குளம் பகுதியில் நேற்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற பேரூந்து – மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பருத்திதுறையில் இருந்து வவுனியா நோக்கி சென்ற இ.போ.ச பேருந்து தாண்டிக்குளம் சந்திக்கு அண்மித்த போது முன்பாக சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த மதிவண்ணன் சிவகுமாரி (40) என்ற பெண் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்டபொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.