இலங்கையில் தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் பற்றிய விவரண படக் காட்சி!

124

இலங்கையில் தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் பற்றிய விவரண படக் காட்சி யாழ் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

எஸ்.ஜே.வி.செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் ஆயர் கலாநிதி க. ஜெபநேசன் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது விளக்க உரையை யாழ் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் கலாநிதி சி.பத்மநாதன் வழங்கியிருந்தார். மேலும் இந்த விவரண படமும் காட்சிப்படுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் முதலமைச்சருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆகிய ஒரே மேடையில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், யாழ் போதான வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி, கல்விமான்கள், புத்திஜீவிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.