இராணுவ உடன்படிக்கை இறைமையைப் பாதிக்காது சிறிலங்காவின் அமெரிக்க தூதுவர்

முன்மொழியப்பட்டுள்ள “சோபா’ எனப்படும் படைகளின் நிலை உடன்பாட்டினால் சிறிலங்காவின் இறைமைக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்று அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப் லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

“சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையயழுத்திடுவதற்கு முன் மொழியப்பட்டுள்ள சோபா உடன்பாடு, இராணுவப் பயிற்சி மற்றும் ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்களுடனேயே தொடர்பு டையது. இதனால் இலங்கையின் இறைமைக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற் படாது.

இந்த உடன்பாடு இன்னமும் கையெழுத்திடப்படவில்லை. இரண்டு நாடுகளும் கலந்துரையாடல்களை நடத்தி வரு கின்றன. இரு நாடுகளும் உடன்பாட்டுக்கு வந்தால், அது இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

இரு நாடுகளுக்கும் இடையே இரா ணுவப் பயிற்சி மற்றும் ஒத்துழைப்பு நடக் கும் முறை தொடர்பாக உடன்பாட்டின் உட்பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் படைகள் சிறிலங்காவுக்கு வருகை தருவது தொடர்பாக, சிறிலங்கா அரசு மற்றும் இராணுவத்துடன் கலந்து ரையாடப்படும்.

1995 ஆம் ஆண்டு இரண்டு நாடுகளும் செய்து கொண்ட உடன்பாடு தற்போது காலாவதி ஆகிவிட்டது. அது நவீன காலத்துக்கு ஏற்ப திருத்தப்பட வேண்டியுள்ளது.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், வெளிப்படையாகக் கலந்துரையாடி இணக்கம் காணப்படும். உடன்பாடு விடயத்தில் இரு தரப்புகளுக்கும் சரியான புரிதல் இருந்தால், பிரச்சினைகளைக் குறைக்க முடியும். வெளிப்டைத்தன்மையுடன் உடன் பாட்டை எட்ட முடியும் என்று இரண்டு நாடுகளின் அரசுகளும் நம்பிக்கை கொண்டுள்ளன.

இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா பல்வேறு நாடுகளுடன், நெருங்கிய ஒத்துழைப்பைக் கட்டியய ழுப்புவது உள்ளிட்ட பல்வேறு உடன் பாடுகளை செய்திருக்கிறது.இந்த உடன்பாடுகள் ஒருபோதும் அந்த நாடுகளின் இறைமைக்கு அச் சுறுத்தலாகவோ தலையீடுகளைச் செய்வதாகவோ இருந்ததில்லை.

இலங்கை, அமெரிக்க ஆயுதப் படைகளுக்கிடையில் வேறுபாடுகள் உள் ளன. இலங்கைப் படைகளின் செயற் பாடுகள் ஒரு தனி நாட்டுக்குள்ளேயே வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால், அமெரிக்கப் படைகள் உலகின் பல பகுதிகளில் உள்ளன.