இராணுவத் தளபதியாக போர்க் குற்றவாளி – ஆவேசமான ராமதாஸ்

162

போர்க் குற்றவாளியை தளபதியாக்குவதா? இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவுனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. 2009ஆம் ஆண்டு போரில் அப்பாவித் தமிழர்களை இனப்படுகொலை செய்வதில் முக்கிய பங்கு வசித்த போர்க் குற்றவாளியை இராணுவத் தளபதியாக நியமித்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.