இந்திய அரசின் நிதியுதவியுடன் யாழில் கலாசார மத்திய நிலையம்

104

இந்திய அரசின் நிதியுதவியுடன் யாழ். நூலகத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டு வந்த கலாசார மத்திய நிலையத்தின் கட்டடப் பணிகள் நிறைவு பெறும் கட்டத்தை எட்டியுள்ளது.

12 மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்படும் இக்கட்டிடத்தில், 600பேரை உள்ளடக்கக்கூடிய திரையரங்க மண்டபம், இணையத்தள ஆராய்ச்சி வசதிகளுடனான நூலகம், கலைக்காட்சிக்கூடம், அருங்காட்சியகம், சங்கீதம் மற்றும் அதனுடன் இணைந்த இசைக்கருவிகள், நடன வகுப்புகளை நடத்தும் வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. 1800 மில்லியன் செலவில் இக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் சீனாவின் பிரசன்னத்தை முறியடிப்பதற்காக வடபகுதியில் அதிக முதலீடுகளை இந்தியா மேற்கொண்டு வருகின்றது.