இந்தியாவில் 122 மில்லியன் மக்கள் வேலை இழந்தனர்

83

கொரோனா வைரஸ் நோய் காரணமாக இந்தியா அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் காரணமாக 122 மில்லியன் மக்கள் கடந்த ஏப்பிரல் மாதம் வேலையிழந்துள்ளனர் என தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வேலையற்றோர் எண்ணிக்கை 27.1 விகிதம் அதிகரித்துள்ளதாக இந்தியன் பொருளாதார அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 4 மடங்கு அதிகமாகும். எனினும் இந்தியா தனது உத்தியோகபூர்வ விபரத்தை வெளியிடவில்லை.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயளர்களின் எண்ணிக்கை 50,000 அதிகரித்துள்ளது.