இங்கிலாந்தில் கோவிட் -19 தாக்கத்தால் தமிழ் வைத்தியர் மரணம்

14

திலகன் என அழைக்கப்படும் 74 வயதான அன்ரன் செபஸ்டியன் என்பவரே இந்நோய்த் தொற்றில் மரணமடைந்த தமிழ் வைத்தியராவார்.

இங்கிலாந்தில் Kingston வைத்தியசாலையின் ஆலோசகராக கடமையாற்றி இளைப்பாறிய இவர் வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மீண்டும் தன்னார்வ தொண்டர் வைத்தியராக பணியில் இணைந்து சேவையாற்றுகையில் கொரொணா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ளார்.

சில வாரங்கள் கொரோனா வைரஸ் நோயளர்களுக்கு தன்னலம் கருதாமல் ஓய்வின்றி சிகிச்சையளித்து வந்த இவரும் நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.