ஆப்கானில் இரு அமெரிக்கப் படையினர் சுட்டுக் கொலை

நங்கர்ஹார் மாகாணம் ஷெர்ஜாத் மாவட்டத்தில் உள்ள ராணுவ படைத்தளத்தில் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, ஆப்கன் ராணுவ சீருடை அணிந்த ஒருவர் அங்கிருந்த ஆப்கன் – அமெரிக்க வீரர்களை நோக்கி இயந்திர துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 2 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.சார்ஜெண்ட் ஜேவியர் ஜாகுவார் குட்டரெஸ்(28) மற்றும் சார்ஜெட். அன்டோனியோ ரே ரோட்ரிக்ஸ் (28) ஆகியோரே கொல்லப்பட்டவர் கள் ஆவர்

இதுகுறித்து மாகாண ஆளுநர் ஷா முகமது மெயாகில் கூறும்போது, “இது இரு நாட்டு படை வீரர்களுக்கிடையே நிகழ்ந்தமோதல் சம்பவம் அல்ல. வெளியாட்கள் யாரேனும் ஊடுருவி இந்த தாக்குதலை நடத்தினார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.