ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படையினரரை மீள பெறும் நடவடிக்கை ஆரம்பம்

57

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் செய்த அமைதி ஒப்பந்தத்தின்படி அங்கிருந்து தனது வீரர்களை திரும்ப பெறும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர, தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், அமெரிக்கா – தலிபான்கள் இடையே கடந்த பிப்ரவரி 29ம் தேதி அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஆப்கனில் இருக்கும் அமெரிக்க படைகள் படிபடியாக திரும்ப பெறப்படும். அதேபோல், தலிபான்களும் தீவிரவாத அமைப்புக்கள் உடனான தொடர்பை துண்டித்துக் கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன.

இதனை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்க படை வீரர்களின் ஒரு பகுதியை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருகிறது. மேலும், ஆப்கன் அதிபர் அஸ்ரப் கனி தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சிறையில் இருக்கும் தலிபான்களை விடுதலை செய்யும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. ஏற்கனவே அதிபர் அஷ்ரப் கனி கூறியது போல். தலிபான்களை விடுவிப்பதில் ஒரு வாரம் தாமதம் ஆகியுள்ளது.