அழிவைநோக்கி கிளிநொச்சி;சமூக அக்கறைகொண்டோர் யாருமில்லையா? -சுடர்

28

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க மனிதர்களுக்கிடையேயான இடைவெளி முறையாக பின்பற்றப்படுவது மிக அவசியமெனஅறிவியலாளர்கள்,மருத்துவராகள், அரசுகள் கூறிவரும் நிலையில் இன்று ஊடரங்கு தளர்வின் போது கிளிநொச்சி நகரில் நாம் கண்ட காட்சி மிக்க கவலையளிப்பதாக உள்ளது.

கொடிய போரொன்றின் மைத்துள் பலகாலம் வாழ்ந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களை பறிகொடுத்து,உடமைகளை இழந்து இன்னும் நிமிரமுடியாமல் தவிக்கும் ஒரு சமூகம் தமது சுயபத்துகாப்பை முற்றக்கப் புறந்தள்ளி பெரும் கூட்டமாக
பொருள் கொள்வனவில் ஈடுபட்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி நிற்கிறது.

தமிழீழ நடைமுறையரசில் பிரமிக்கத்தக்க வகையில் ‘தமிழீழ சுகாதார சேவைகள்’ செயலாற்றிய அந்த நாட்கள் கண்முன் விரிகின்றன.

குறைவான வளங்களுடன் எந்த தொற்றுநோய்யும் அங்கு பரவிவிடாவண்ணம் அன்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இலங்கைத்தீவு முழுவதும் சிக்குன்குனியா (Chikungunya) பரவி மக்களை அச்சத்துக்குள்ளாக்கியபோது வன்னிநிலப்பரப்பு எந்தவித நோய்த்தொற்றுமின்றி காக்கப்பட்டது.

போராளிகள்,தமிழீழ காவல் துறையினர், வைத்தியர்கள்,சுகாதார பணியாளர்கள்,சமூக ஆர்வலர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து
மக்கள் நலனில் அக்கறைகொண்டு செயற்பட்டதால் எந்த தொற்று நோயையும் அன்று வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது.

ஆனால் இன்றோ நிலைமைகள் தலைகீழாக உள்ளது.

இன்று ‘சமூக இடைவெளி பேணல்’ என்பதை புறந்தள்ளி மக்கள் நடந்துகொண்டுள்ளனர்.அதற்கு பலவாறான காரணங்கள் கூறப்படலாம்.ஆனாலும் இவையெல்லாம் தவிர்க்கப்பட்டிருக்கவேண்டியவைகளே

மக்கள் இவ்வாறு நடந்துகொள்வதை தடுத்து உரிய வழிகாட்டல்களை வழங்க அங்கு யாரும் இல்லையா? மருத்துவ மற்றும் சுகாதாரத்துறையினர்,காவல் துறையினர் மாவட்ட மட்ட அரசாங்க நிருவாக அலுவலர்கள் ,சமூக ஆர்வலர்கள் எவருக்கும் இந்த மனிதர்களின் உயிர்களில் அக்கறையில்லையா?

ஊரடங்கு தளர்வின்போது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறலாம் என்பதால் இலங்கையில் மற்றைய இடங்களில் எல்லாம் காவல்துறை ஈடுபடுத்தப்பட்டிருந்ததே, ஏன் இங்கு அவ்வாறு எதுமே இடம்பெறவில்லை.

ஏற்கனவே தனது இருப்பை சிறிது சிறிதாக இழந்துகொண்டிருக்கும் தமிழ் சமூகம்,இந்த கொரோனா நோயாலும் மேலும் அழியவேண்டுமா?

இனியாவது இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க
அக்கறையுள்ள சமூக ஆர்வலர்கள்,குறிப்பாக எமது இளையோர்
நடவடிக்கைகளில் உடனடியாக இறங்கவேண்டும்.