அரபு மத்ரஸாக்களில் என்ன நடைபெறுகின்றது? ஆய்வு செய்யுமாறு மஹிந்த உத்தரவு

38

இலங்கையிலுள்ள சகல அரபு மத்ரஸாக்களையும் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அந்த அரபு மத்ரஸாக்களில் போதிக்கும் விடயதானங்கள் தொடர்பிலும் ஆய்வுக்குட்படுத்துமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார். இவ்வாறு ஆய்வுக்குட்படுத்தியதன் பின்னர், முஸ்லிம் விவகார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு என்பவற்றுடன் இணைந்து சரியான பரிந்துரைகளை தயார் செய்யுமாறும் பிரதமர் அறிவுரை வழங்கியுள்ளார்.

பெளத்த மத விவகாரம் மற்றும் கலாசார அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் என்பவற்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.