அரசியல் கைதிகள் விடுதலை குறித்து பேசினோம் – சுமந்திரன்

76

நேற்று (4) சிறீலங்கா பிரதமர் மகிந்தா ராஜபக்சாவுடன் இடம்பெற்ற சந்திப்பில் நீண்டகாலம் சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பேசினோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஒரு நாட்டின் ஜனநாயகம் என்பது அதன் நாடாளுமன்றத்தில் தான் தங்கியுள்ளது. எனவே நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து அவர்களுக்கு தெரியப்படுத்தினோம். அதன்போது பசில் ராஜபக்சாவும் உடன் இருந்தார்.

நீண்டகாலம் சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பேசினோம். இது குறித்து அதிக கவனம் செலுத்துவதாக தெரிவித்த மகிந்தா, தான் அரச தலைவருடன் பேசிய பின்னர் பதில் தருவதாக தெரிவித்துள்ளார் என சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.