அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்க ட்ரம்ப் கோரிக்கை

28

இந்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்க அதிபர் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் பதிவாகும் தபால் வாக்குகளில் மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

உலக நாடுகள் எல்லாம் தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. அங்கு தேர்தலுக்கான பிரசாரங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் பெரும்பாலான மக்கள் தபால் வாக்குகளை செலுத்த ஊக்குவிக்கப்பட உள்ளனர்.

பெரும்பாலும் 70% இற்கும் அதிகமான மக்கள் தபால் வாக்குகளை செலுத்த வாய்ப்புள்ளது. கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ருவிற்றர் பக்கத்தில் “அனைவரும் அஞ்சல் முறையில் வாக்களித்தால், 2020ஆம் அண்டு தேர்தல் தவறான, மோசடியான தேர்தலாக அமைந்து விடும். இது அமெரிக்காவிற்கே மிகப் பெரிய அவமானமாகி விடும். மக்கள் முறையாக, பாதுகாப்பாக வாக்களிக்கும் வரை தேர்தலை தள்ளி வைக்கலாமா” என்று தெரிவித்துள்ளார்.