அமெரிக்கா,பிரித்தானியாவுக்கு உயிர்காப்பு கருவிகள்;ரசியா,சீனா உதவி

18

உலகத்தின் இயக்கத்தை தனது காட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் மேற்குலக நாடுகளை அதிகம் அச்சுறுத்தி வருவதுடன்இ அங்கு பலத்த இழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்றது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றது.

நேற்று (04) சனிக்கிழமை 300 செயற்கை சுவாச உபகரணங்களுடன் சீனாவின் விமானம் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளதாக பிரித்தானியா அரசு தெரிவித்துள்ளது.

அதேசமயம்இ 1000 செயற்கை சுவாச உபகரணங்களுடன் சீனாவின் விமானம் அமெரிக்காவின் ஜோன் எப் கெனடி விமானநிலையத்தை சனிக்கிழமை வந்தடையவுள்ளதாக அமெரிக்காவின் நியூயோர்க் மாநில ஆளுநர் அன்றூ கூமோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக நியூயோர்க் மாநிலமே உள்ளது. அங்கு சனிக்கிழமை (4) வரையிலான 24 மணி நேரத்தில் 630 பேர் மரணமடைந்துள்ளனர். நியூயோர்க் மாநிலத்தில் மட்டும் 3,565 பேர் நேற்றுவரை இறந்துள்ளதுடன், 113,704 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயோர்க் நகரத்தில் மட்டும் 63.306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இறுதியாண்டு மருத்துவபீட மாணவர்களையும் வைத்தியசாலைகளில் பணியற்ற அழைத்துள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் மில்லியன் கணக்கான முகக் கவசங்களுடன் சீனாவின் விமானம் எதிர்வரும் 48 மணி நேரத்தில் கனடாவை வந்தடையவுள்ளதான கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ நேற்று (4) தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமெரிக்காவிற்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை ரஸ்யா அனுப்பியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம் ரஸ்ய அதிபர் விளாமிடீர் பூட்டினுடன் இந்த வாரம் மேற்கொண்ட பேச்சுக்களைத் தொடர்ந்தே இந்தப் பொருட்களை வெள்ளிக்கிழமை (2) ரஸ்யா அனுப்பியிருந்தது.

ஆனால் தாம் அவற்றை உதவியாக கேட்கவில்லை, பணம் கொடுத்தே வாங்கினோம் என அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

எனினும் அமெரிக்கா அரை பங்கு உபகரணங்களுக்கு பணம் தந்ததாகவும். மிகுதியை ரஸ்யா அன்பளிப்பாக வழங்கியதாகவும் ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.