அபுதாபியில் சிறீலங்கா தூதரகம் மூடல் – வைத்தியர்களின் ஓய்வூதிய வயது அதிகரிப்பு

24

அபுதாபியில் உள்ள சிறீலங்கா தூதரகத்தில் பணியாற்றும் 5 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு உள்ள சிறீலங்கா தூதரகம் இன்று (21) மூடப்பட்டுள்ளது.

நாளையும் தூதரகம் திறக்கப்படமாட்டாது என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தற்போதைய கொரோனா நெருக்கடிகளை முன்னிட்டு வைத்தியர்களின் ஓய்வுதிய வயது எல்லையை 60 இல் இருந்து 61 ஆக சிறிலங்கா அரசு அதிகரித்துள்ளது.

இதனை அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாவவும், ஏனைய துறைகள் தொடர்பில் ஆரயப்படும் எனவும் சிறிலங்கா அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.